Tamilசெய்திகள்

ஆபாச செயலிகள் பெயரில் உலா வரும் ஆபத்தான ‘APK’ கோப்புகள்! – இந்திய அரசு எச்சரிக்கை

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் நைட் பிளே (Night Play), ரிலூப் (Reloop), கைஸ் (Kyss), நெக்ஸோ (Nexo), விமோ (Vimo), ரிவோ (Rivo) மற்றும் விக்ஸா (Vixa) போன்ற ஆபாச உள்ளடக்கங்களைக் கொண்ட தளங்கள் போலக் கவவர்ச்சி விளம்பரங்களாக வெளியாகும் ஆபத்தான செயலிகள் குறித்துப் இந்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் குற்றப் பிரிவு (I4C) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய கவர்ச்சி விளம்பரங்களைக் கிளிக் செய்யும்போது, அவை கூகுள் பிளே ஸ்டோருக்குச் செல்லாமல் நேரடியாகத் தேவையற்ற மற்றும் ஆபத்தான ‘APK’ கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யத் தூண்டுவதாக இணையப் பாதுகாப்பு மையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தச் செயலிகளை ஸ்மார்ட்போன்களில் நிறுவுவதன் மூலம், பயனர்களின் தனிப்பட்ட குறுஞ்செய்திகள், நிழற்படங்கள் மற்றும் வங்கி அட்டைத் தகவல்கள் திருடப்பட்டு நிதி இழப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுவதால், தெரியாத விளம்பரங்கள் வழியே ஏபிகே கோப்புகளைப் பதிவிறக்கக் கூடாது என்றும் அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.