மரியாதைக் குறைவான விமர்சனங்கள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய ஷோபனா ரவி
தவெக தலைவரும் முதலமைச்சருமான. ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பதிவிட்டதற்காகத் தன்னை சமூக வலைதளங்களில் அவதூறாகவும், பிறப்பின் அடிப்படையில் சாதியைக் குறிப்பிட்டு மரியாதைக் குறைவாகவும் விமர்சித்தவர்களைத் தன் பக்கத்திலிருந்து உடனடியாக ‘பிளாக்’ செய்துள்ளதாகப் பிரபல முன்னாள் செய்தி வாசிப்பாளரும் எழுத்தாளருமான ஷோபனா ரவி தெரிவித்துள்ளார்.
இத்தகைய நாகரிகமற்ற மற்றும் பண்பாடற்ற நடத்தை அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியையே களங்கப்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைக் குறிப்பிட்டுத் தனது வெளிப்படையான கருத்தையும் கேள்விக்கூண்டில் நிறுத்தியுள்ளார்.
ஓர் இந்தியப் பிரஜை என்ற முறையில் நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் இருப்பதைப் போலவே தனக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளதெனக் குறிப்பிட்ட ஷோபனா ரவி, உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் இப்படி நாராசமான முறையில் பதில் தருவதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா என்றும், பணத்தையும் அதிகாரப் பதவியையும் தாண்டி மனிதப் பண்பாடே மிகவும் முக்கியமானது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் மிகவும் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
