அமெரிக்காவின் விசா கெடுபிடியால் உயர்ந்த இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் செலவினங்கள்!
அமெரிக்காவின் விசா கெடுபிடிகள் மற்றும் தொடர் குடியேற்றச் சவால்கள் காரணமாக, இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் துணை ஒப்பந்ததாரர்கள் (Subcontractors) மற்றும் வெளிப்புற ஆலோசகர்களுக்கான செலவினங்களை வெகுவாக உயர்த்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (Q2FY27) இந்தியாவின் டாப் 4 IT நிறுவனங்களின் துணை ஒப்பந்தச் செலவினம் 4 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கு டிரம்ப் நிர்வாகம் $1,00,000 கட்டணம் விதித்தது மற்றும் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் (PERM) நடைமுறைகளில் ஏற்பட்ட தாமதங்கள் ஆகிய காரணங்களால் உள்நாட்டு திறமையாளர்களைத் துணை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவது தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.
இந்தச் செலவின உயா்வில் டிசிஎஸ் (TCS) நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.3,248 கோடியாக இருந்த டிசிஎஸ்-ன் துணை ஒப்பந்தச் செலவு, தற்போது 52.5% உயர்ந்து ரூ.4,954 கோடியை எட்டியுள்ளது.
