Tamilவிளையாட்டு

F4இந்தியன் சாம்பியன்ஷிப் சுற்று 3-ல் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணியின் லுவிவே சம்புட்லா அபார வெற்றி!

சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 2026 இந்தியன் ரேசிங் திருவிழாவின்ஒரு பகுதியாக நடைபெற்றF4 இந்தியன் சாம்பியன்ஷிப் 3-வது சுற்றில் விறுவிறுப்பான பந்தயங்கள், வியக்கத்தக்க திருப்புமுனைகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளும் அரங்கேறின.கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணியின் லுவிவே சம்புட்லா இரண்டுபோட்டிகளில்முதலிடம்பெற்றதோடு, மற்றொருபோட்டியில்மூன்றாம் இடத்தைப் பிடித்து இந்த வார இறுதியில் மிகச் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி சாம்பியன்ஷிப் – ன்புள்ளிகள்பட்டியலில் முன்னிலை பெற்றார்.அதே வேளையில், கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணியைச் சேர்ந்த 15 வயதான ஆரோன் மேத்தா,சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பந்தயத்தை வென்றுஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார்.

சம்புட்லா5-புள்ளிகள்பின்தங்கியிருந்தநிலையில், அதனை21-புள்ளிகள் முன்னிலையாக மாற்றி, 138 புள்ளிகளுடன் கிச்சாஸ் கிங்ஸ் பெங்களூரு அணியின் ஆரிஸ் கிரியாகோவை (117 புள்ளிகள்) பின்னுக்குத் தள்ளினார். 3.717 கிலோமீட்டர் சுற்றளவில், சம்புட்லா தனது அசாத்திய வேகத்தையும் பந்தயத் திறனையும் வெளிப்படுத்தி, முதல் இரண்டு பந்தயங்களில் ஆறாவது இடத்திலிருந்து தொடங்கி வெற்றியைப் பதிவு செய்தார்.ஸ்பீட் டீமென்ஸ் டெல்லி அணியின் என்டிசோ மபுண்டா மூன்று பந்தயங்களிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தினார்.இறுதிப் பந்தயத்தில் கடும் அழுத்தமும், போட்டியும்இருந்தபோதிலும், முதல் வெற்றியை பதிவுசெய்துதனதுதிறனைமேத்தா நிரூபித்தார்.

எட்டு உரிமையாளர் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 16 ரேஸ்ஓட்டுநர்கள் சென்னையில் களமிறங்கியபோது, கிரியாகோவ் புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருந்தார்.இருப்பினும், சவாலான ஈரப்பதமான வானிலை மற்றும் கடுமையான போட்டிகள் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான யுத்தசூழலை விரைவாக மாற்றியமைத்தன.

முதல் பந்தயத்தின் தொடக்கத்தில் முன்னிலை பெற்ற கிரியாகோவ் – க்குஇணையாகமேத்தாவும் பயணித்தார்; சம்புட்லா முதல் லேப் – ல் இரண்டு இடங்கள் முன்னேறினார்.ஈரப்பதமான தரைப்பரப்புரேஸ்ஓட்டுநர்களுக்குசவாலாகஇருந்த நிலையில், சம்புட்லா மேத்தாவைக் கடந்து, இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்பின்னர் 9-வது சுற்றில் கிரியாகோவ் தனது காரின் பின்புறப் பிடியை இழந்ததைதனக்குசாதகமாகப்பயன்படுத்தியமேத்தாமுன்னிலைபெற்றார்.ஸ்பீட் டீமென்ஸ்டெல்லிக்காக பத்தாவது இடத்திலிருந்து தொடங்கிய என்டிசோ மபுண்டா, மேத்தா மற்றும் கிரியாகோவை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.அதே வேளையில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணியின் ஆர்யன் நரோலாவும் முன்னணி இடங்களுக்கான போட்டியில் இணைந்தார்.

மழை மீண்டும் பெய்யத் தொடங்கிய நிலையில், சம்புட்லா9.606 வினாடிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1:48.647 என்ற வேகமான லேப்நேரத்தைப் பதிவு செய்தார்.மபுண்டா பத்தாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்தையும், நரோலா மூன்றாவது இடத்தையும்பிடித்தனர்.மேத்தா, நான்காவது இடத்திலும், கிரியாகோவ் ஐந்தாவது இடத்திலும் பந்தயத்தை நிறைவுசெய்தனர்.இந்தியாவைச்சேர்ந்தரேஸ் ஓட்டுநர்களில் கிரிஷே குட்டே (ஸ்பீட் டீமென்ஸ் டெல்லி) அதிகபட்சமாக ஆறாவது இடத்தைப் பிடித்தார்.இந்த சுற்றின்முடிவு சம்புட்லாவுக்கு 10-புள்ளிகள்முன்னிலையை வழங்கி, தற்போதையசூழலில்அவரது வெற்றி வாய்ப்புகளை சாதகமாகஆக்கியிருக்கிறது.

சம்புட்லா தனது அதே சிறப்பான ஃபார்மை இரண்டாவது பந்தயத்திலும் வெளிப்படுத்தினார்; ரிவர்ஸ்-கிரிட் முறையில் மீண்டும் ஆறாவது இடத்திலிருந்து களமிறங்கிய கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் வீரரான அவர், மற்ற வீரர்களை லாவகமாகக் கடந்து 13 சுற்றுகளுக்குப் பிறகு 33:22.590 என்ற நேரத்தில் தனது இரண்டாவது தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்தார்.மபுண்டா தொடர்ந்து கடுமையான போட்டியை தந்து, வெற்றியாளரை விட வெறும் 1.211 வினாடிகள் பின்தங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.இந்தப் பந்தயத்திலும் சம்புட்லா 1:50.071என்ற வேகமான லேப்சாதனையைப் பதிவு செய்தார்.

என்டிசோ மபுண்டா தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இரண்டாம் இடத்தைப் பிடித்தது அவரது நிலையான திறமையை அடிக்கோடிட்டுக் காட்டியது; அதே வேளையில், முதல் பந்தயத்தில் சந்தித்த சவால்களிலிருந்து மீண்டு வந்த கிச்சாஸ் கிங்ஸ் பெங்களூரு அணியின் கிரியாகோவ் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணியின் நரோலா நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.அவரைத் தொடர்ந்து இந்திய வீரர்களில் மீண்டும் முன்னிலை வகித்த ஸ்பீட் டெமன்ஸ் டெல்லியின் குட்டே ஐந்தாவது இடத்தையும், கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணியின் மேத்தா ஆறாவது இடத்தையும் பிடித்தனர்.முதல் ஆறு இடங்களைப் பிடித்த ஓட்டுநர்களுக்கிடையிலான நேர வித்தியாசம் வெறும் 5.414 வினாடிகளாக மட்டுமே இருந்தது, இந்தப் பந்தயக் களத்தில் அதிகரித்து வரும் கடுமையான போட்டித்தன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.சம்புட்லாவின் இந்த இரண்டாவது வெற்றியானது, இறுதிப் பந்தயத்திற்குச் செல்லும் நிலையில், சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் கிரியாகோவை விட அவருக்குள்ள முன்னிலையை 14 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

இந்த வார இறுதிபோட்டியின் மிக முக்கியத் தருணம் மூன்றாவது பந்தயத்தில் அரங்கேறியது.முதல் இடத்தைப்பெற்றிருந்த மேத்தா, அதனைசாதனைக்குரியவெற்றியாகமாற்றினார். பல சறுக்கல்கள், சிவப்புக் கொடி மற்றும் பாதுகாப்புக் கார் குறுக்கீடுகளுக்கு இடையிலும், கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணியின் இந்த இளம் வீரர் அசாத்தியமான தைரியத்துடன் செயல்பட்டு, கடைசிநேரத்தில்வேகமெடுத்தமபுண்டாவை விட 0.546 வினாடிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஆரம்ப வளைவுகளில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணியின் நரோலாவின்கடும்சவாலையும்மீறி, மேத்தா தனது முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டார்.இருப்பினும், வழுக்கும் தன்மையுள்ள ரேஸிங்தரைப்பரப்பால் பல ஓட்டுநர்கள் தடுமாறினர்.கிச்சாஸ் கிங்ஸ் பெங்களூருவின் கிரியாகோவ் புல்வெளியில் சறுக்கி ஆழமான குட்டையில் சிக்கிக் கொண்டார்; கொல்கத்தா ராயல் டைகர்ஸின் ஸ்வர்ணவ் தாஸும் பாதையை விட்டு விலகிச்செல்லநேர்ந்தது. இதனால் சிவப்புக் கொடி காட்டப்பட்டு, கார்கள் மீட்கப்பட்ட பின் பந்தயம் பாதுகாப்புக் கார்முன்செல்லஅதன் பின்னால் தொடர்ந்தது.கிரியாகோவ் மற்றும் தாஸ் ஆகியோர் பின்தங்கிய நிலையில், மீண்டும் தொடங்க வேண்டிய கட்டாயத்தில்இருந்தபோது, நரோலா 13-வது இடத்திலிருந்து தொடர்ந்தார்.
பந்தயம் மீண்டும் தொடங்கியதும் மேத்தா, சம்புட்லாவை விட 1.5 வினாடிகள் முன்னிலை பெற்றார்.ஆனால், நான்காவது இடத்தில் இருந்த ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ் அணியின் புவன் போனு விலகியதால் மீண்டும் பாதுகாப்புக் கார் களமிறங்கி, மேத்தாவின் முன்னிலையை ரத்து செய்தது.பந்தயத்தின் இறுதி கட்டத்தில் ஸ்பீட் டீமென்ஸ் டெல்லியின் என்டிசோ மபுண்டா மேத்தாவை நெருங்கியதால் இறுதி லேப் – ன்போது பெரும் பரபரப்பு நிலவியது.மபுண்டா முந்திச் செல்ல முயன்ற போதிலும், அவரது சவால்களைத் திறமையாக முறியடித்த மேத்தா, சாம்பியன்ஷிப்பில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார். 15 வயதேநிரம்பியமேத்தா, இதன்மூலம்ஒருபுதிய வரலாற்றுச் சாதனையைப்படைத்திருக்கிறார்.

சென்னையில் நடைபெறுகின்றசுற்றுகளில்தொடர்ந்து மூன்றாவது முறையாக என்டிசோ மபுண்டா இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.சம்புட்லா மூன்றாவது இடத்தைப் பிடித்து தனது இரட்டை வெற்றிப் பயணத்தை நிறைவு செய்தார்.பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு வந்த தாஸ் (கொல்கத்தா ராயல் டைகர்ஸ்) நான்காவது இடத்தையும், காட்ஸ்பீட் கொச்சியின் மஹ்லோரி மபுண்டா ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர்.கிரியாகோவ் 16-வது இடத்திலிருந்து முன்னேறி ஆறாவது இடத்தையும், என்சோ ருஜுகிரோ (கிச்சாஸ் கிங்ஸ் பெங்களூரு) ஏழாவது இடத்தையும் பிடித்தனர்.எட்டாவது இடத்திற்கு முன்னேறிய நரோலா 1:39.676 என்ற வேகமான லேப் நேரத்தைப் பதிவு செய்தார்.

இந்த வார இறுதிப் போட்டிகள் இதில்பங்கேற்றமற்ற வீரர்களின் மன உறுதியையும், மீள்திறனையும்சவாலுக்குஉட்படுத்தின. அகமதாபாத் அபெக்ஸ் ரேசர்ஸ் அணியின் மத்தியாஸ் அலெக்சாண்டர் போர்லண்ட் முதல் பந்தயத்தில் ஒரு சுற்றுக்குப் பிறகு விலகினார்.ஈரப்பதமான வானிலைமற்றும்தரைப்பரப்பால் காட்ஸ்பீட் கொச்சியின் லில்லி-மே வாட்கின்ஸ் மற்றும் ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ் அணியின் ஜானின் வெர்மத் ஆகியோரும் சிரமங்களைச் சந்தித்தனர்; இது இந்த மூன்று பந்தயங்களிலும் நிலவிய கடுமையான சவால்களை எடுத்துக்காட்டுகிறது.

சென்னை சுற்று, சாம்பியன்ஷிப் போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.இரண்டு வெற்றிகள் மற்றும் மூன்று பந்தயங்களிலும் வெற்றிமேடையில்ஏறியதன் மூலம், கிரியாகோவை விட 5 புள்ளிகள் பின்தங்கியிருந்த சம்புட்லா தற்போது 21 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார்.என்டிசோ மபுண்டாவின் தொடர்ச்சியான இரண்டாவது இடங்கள் அவரது தொடர்ச்சியானதிறனுக்குசான்றாகஅமைந்திருந்தது. மேத்தாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி இந்த வார இறுதிப் போட்டிகளில் குறிப்பிடத்தக்க தருணமாக நினைவு கூரப்படும். சவாலான வானிலை மற்றும் விறுவிறுப்பான போட்டிகளுக்கு மத்தியில் இது ஒரு மறக்க முடியாத வாரமாக அமைந்தது.

சாம்பியன்ஷிப் அடுத்த சுற்றுக்கு நகரும் நிலையில், சம்புட்லா புள்ளிகள் பட்டியலில் வலுவான முன்னிலையுடனும், அதே வேளையில் கிரியாகோவ் அந்த இடைவெளியைக் குறைக்க வேண்டிய சவாலையும்எதிர்கொள்கின்றனர். தனது அசாத்திய வேகத்தை கொல்கத்தா ராயல் டைகர்ஸ் அணிக்கான வரலாற்று சிறப்புமிக்கவெற்றியாக மாற்றிய மேத்தா, இந்த வார இறுதியின் மிகச் சிறந்த நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

ஐஆர்எல் பந்தயம் 1: ரவுல் ஹைமனைப் பின்னுக்குத் தள்ளி ஷஹான் அலி மொஹ்சின் பரபரப்பானவெற்றி

மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்ற இந்தியன் ரேசிங் லீக்கின் (IRL) தொடக்கப் பந்தயத்தில், ஸ்பீட் டீமென்ஸ் டெல்லி அணியின் ஷஹான் அலி மொஹ்சின், கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணியின் ரவுல் ஹைமனை வெறும் 0.506 வினாடிகள் வித்தியாசத்தில் முறியடித்து தனது முதல் இடத்திலிருந்தே (pole position) வெற்றியைப் பதிவு செய்தார்.எட்டு சுற்றுகள் கொண்ட இந்தப் பந்தயத்தை மொஹ்சின் 18:32.970 என்ற நேரத்தில் முடித்து, 1:36.354 என்ற வேகமான மடி நேரத்தையும் பதிவு செய்தார்.நான்காவது இடத்திலிருந்து தொடங்கிய ஹைமன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.சென்னை டர்போ ரைடர்ஸ் அணியின் ஷேன் சந்தாரியா வெற்றியாளரை விட 2.690 வினாடிகள் பின்தங்கி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ் அணியின் முகமது ரியான் ஏழாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறினார்.கிச்சாஸ் கிங்ஸ் பெங்களூருவின் எமில் ஹெயர்டால் ஐந்தாவது இடத்தையும், சென்னை டர்போ ரைடர்ஸின் சாய் சிவ சங்கரன் ஆறாவது இடத்தையும் பிடித்தனர்.ஸ்பீட் டீமென்ஸ்டெல்லியின் சச்செல் ரோட்ஜ் 11-வது இடத்திலிருந்து முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்ததன் மூலம், அந்த அணியின் இருவர் முதல் ஏழு இடங்களுக்குள் வந்தனர்.முதல் எட்டு ஓட்டுநர்களும் வெற்றியாளரின்நேரத்திலிருந்து8.523 வினாடிகளுக்குள் பந்தயத்தை முடித்திருப்பது ஐஆர்எல் தொடக்கப் பந்தயத்தில்நிலவும்கடுமையான போட்டியை காட்டுகிறது.