Tamilசெய்திகள்

மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பலன் தராது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல் GST-ல் சீர்திருத்தம் செய்வது பயனளிக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் நிதியமைச்சர்கள் டெல்லியில் கூடி ஆலோசித்த புகைப்படத்தை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

GST வரி குறைப்பு சீர்திருத்தம் மக்களை சென்றடைய வேண்டும். வருவாய் நலனை பாதுகாக்க அனைத்து மாநிலங்கள், மத்திய அரசின் ஆதரவு கோரும் வரைவு GST கவுன்சிலிடம் வழங்கப்படும்.

மாநிலங்களின் வருவாயை பாதுகாக்காமல், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பலன் தராது. குறைப்பு விகிதங்களின் நன்மைகள் சாதாரண மக்களை சென்றடைய வேண்டும். வருவாய் நலன்களைப் பாதுகாப்புடன், நியாயமான முடிவுகளை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.