Tamilசெய்திகள்

கனமழை எச்சரிக்கை – 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

தொடர் கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று (21.10.2026) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:

சென்னை

திருவள்ளூர்

செங்கல்பட்டு

காஞ்சிபுரம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து பெய்து வரும் மழையைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.