Tamilசெய்திகள்

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள மணிமங்கலத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தை வீட்டில் வரிமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செல்வப்பெருந்தகை வீட்டிலும் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு விநியோகிக்க செல்வப்பெருந்தகை வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, பிரசாரத்திற்கு செல்ல விடாமல் இந்தி பேசும் வருமான வரித்துறையினர் தன்னை சிறைப்பிடித்துள்ளதாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “எனது அரசியல் கடமைகளை செய்ய விடாமல் சோதனை என்ற பெயரில் சிறைபிடித்து வைத்துள்ளனர். மத்திய அமைப்புகளை அரசியல் அழுத்தத்தின் கருவிகளாகப் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.