வாடிக்கையாளர்களின் அநாரீக செயல்! – சென்னை லுலு ஹைப்பர் மார்க்கெட் ஊழியர்கள் வேதனை
சென்னையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள லுலு ஹைப்பர் மார்க்கெட்டில், பில் செலுத்தாமல் பொருள்களைத் திறந்து சாப்பிட்டுவிட்டுச் செல்லும் வாடிக்கையாளர்களின் செயலால் கடை ஊழியர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள், நூடுல்ஸ், பழங்கள், குளிர்பானங்கள் மற்றும் சமையல் பொருள்கள் போன்றவற்றைச் சிலர் அங்கேயே பிரித்துச் சாப்பிட்டுவிட்டு, காலி கவர்கள் மற்றும் பாட்டில்களை அலமாரிகளிலேயே வீசிச் செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.
பணம் செலுத்தாமல் பொருள்களைப் பயன்படுத்திவிட்டு அலட்சியமாகச் செல்லும் இத்தகைய பொறுப்பற்ற செயல்களால் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருவதுடன், இது சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
