Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் 2026 – சென்னையை வீழ்த்தி 4 வது இடத்திற்கு முன்னேறிய ஐதராபாத்!

சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 194 ரன்கள் குவித்தது. 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடியது.

பவர்பிளேயில் 3 விக்கெட்களை இழந்து 76 ரன்கள் குவித்த சி.எஸ்.கே அதன் பிறகு ரன் அடிக்க முடியாமல் திணறியது. இறுதியில் 184 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் புள்ளிகள் பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை 6 போட்டிகள் விளையாடியுள்ள ஐதராபத் அணி, 3 வெற்றி, 3 தோல்விகளை சந்தித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் 6 போட்டிகளில் விளையாடி 4 தோல்வி, 2 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது.