ஜோதிகாவின் புது படம் பூஜையுடன் தொடங்கியது
ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காற்றின் மொழி’. ராதா மோகன் இயக்கியுள்ள இப்படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், அடுத்த படத்தின் பூஜையை இன்று போட்டிருக்கிறார் ஜோதிகா.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் 21-வது படத்தில் ஜோதிகா நடிக்க இருக்கிறார். இதற்கான பூஜை இன்று நடத்தப்பட்டது. இந்த வார இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்குகிறார்.
இதில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர். ஸீன் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு கோகுல் பென்னி ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இவர்கள், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘நந்த கோபால குமாரன்’ என்னும் ‘NGK ’ படத்தை தயாரித்து வருகிறார்கள்.