ரேஷன் கடைகளில் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகம்: மத்திய அரசு உத்தரவு
நாட்டின் எரிசக்தித் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில், ஒரு அவசரக்கால நடவடிக்கையாக அடுத்த 60 நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஏற்கனவே மண்ணெண்ணெய் பயன்பாடே இல்லாத ‘மண்ணெண்ணெய் இல்லா மாநிலங்கள்’ என்று அறிவிக்கப்பட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இந்த விநியோகத்தை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களின் வசதிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அரசால் அடையாளம் காணப்படும் இரண்டு பொதுத்துறை பெட்ரோல் பங்க்-களிலும் நேரடியாக மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இந்தத் தற்காலிக ஏற்பாடு, சாமானிய மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
