Tamilசெய்திகள்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுக்கள்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவிவரும் நிலையில் அது மேலும் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து கிழக்கு கடற்கரை பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடலோர காவல்படை தீவிரப்படுத்தியுள்ளது.

ரேடார் நிலையங்கள் மூலம் வானிலை அமைப்பைத் தொடர்ந்து கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.