Tamilசெய்திகள்

மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு வெளியீடு – ஆகஸ்ட் 13 ஆம் தேதி நிறைவடைகிறது

மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் லிமிடெட் (Milky Mist Dairy Food Limited (the “Company”) தனது புதிய பங்குகளின் (Equity Shares) ஆரம்பப் பொது வெளியீட்டைத் (IPO) தொடங்குவதற்கான விண்ணப்ப தேதிகளை அறிவித்துள்ளது. இதன்படி விண்ணப்பம்/வெளியீடு 11 ஆகஸ்ட் 2026 அன்று தொடங்கப்பட்டு 13 ஆகஸ்ட் 2026 அன்று நிறைவடைகிறது.

ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான ஏல நாள் 10 ஆகஸ்ட் 2026 ஆகும்.

முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 107 பங்குகளுக்கும், அதற்குப் பிறகு 107-ன் மடங்குகளிலும் விண்ணப்பிக்கலாம்.

இப்பங்கு வெளியீட்டின் கீழ் முக மதிப்பு ₹2 கொண்ட பங்குகளின் விலை வரம்பு ₹133 முதல் ₹140 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்தப் பங்கு வெளியீட்டின் அளவு, முக மதிப்பு ₹2 கொண்ட [●] பங்குகள் வரை உள்ளடக்கியது; இதன் மொத்த மதிப்பு ₹15,530.00 மில்லியன் வரை இருக்கும்.

இந்த பங்கு வெளியீடானது, முக மதிப்பு ₹2 கொண்ட [●] பங்குகள் வரை உள்ளடக்கிய ₹14,280.00 மில்லியன் மதிப்பிலான புதிய பங்குகளின் வெளியீட்டையும் (Fresh Issue), [●] பங்குகள் வரை உள்ளடக்கிய ₹1,250.00 மில்லியன் மதிப்பிலான பங்குகளின் விற்பனைக்கான சலுகையையும் (Offer for Sale – OFS) கொண்டுள்ளது.

இந்த விற்பனைக்கான சலுகையின் கீழ், சதீஷ்குமார் T அவர்கள் முக மதிப்பு ₹2 கொண்ட [●] பங்குகள் வரை உள்ளடக்கிய ₹750.00 மில்லியன் மதிப்பிலான பங்குகளையும், அனிதா S அவர்கள் முக மதிப்பு ₹2 கொண்ட [●] பங்குகள் வரை உள்ளடக்கிய ₹500.00 மில்லியன் மதிப்பிலான பங்குகளையும் விற்பனை செய்கின்றனர்.

தகுதியுள்ள ஊழியர்களுக்கான ஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் (Employee Reservation Portion.) விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்குப் பங்கு ஒன்றுக்கு ₹13 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

நிறுவனம், தனது புக் ரன்னிங் லீட் மேனேஜர்களுடன் கலந்தாலோசித்து, அமலிலுள்ள சட்ட விதிகளின்படி ஐபிஓ-விற்கு முந்தைய பங்கு ஒதுக்கீடு (Pre-IPO Placement) மூலம் மொத்தம் ₹3,570.00 மில்லியனைத் திரட்டியுள்ளது. இதில், (I) முக மதிப்பு ₹2 கொண்ட 543,789 சாதாரணப் பங்குகள் பங்கு ஒன்றுக்கு ₹139.76 விலையிலும் (பங்கு பிரீமியம் ₹137.76 உட்பட); மற்றும் (II) முக மதிப்பு ₹2 கொண்ட 25,000,000 கட்டாயமாக மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்குகள் (compulsorily convertible preference shares (CCPS)) பங்கு ஒன்றுக்கு ₹139.76 விலையிலும் ஒதுக்கப்பட்டன.

ரெட் ஹெர்ரிங் தகவல் அறிக்கையின் (Red Herring Prospectus) மூலம் வெளியிடப்படும் பங்குகள் Bombay Stock Exange – BSE மற்றும் National Stock Exchange of India Limited -NSE ஆகியவற்றில் பட்டியலிட
முன்மொழியப்பட்டுள்ளன. இந்த வெளியீட்டின் நோக்கங்களுக்காக, முதன்மைப் பங்குச் சந்தையாக (Designated Stock Exchange) NSE செயல்படும்.

திருத்தப்பட்ட 1957-ம் ஆண்டின் பத்திரங்கள் ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிகளின் (Securities Contracts (Regulation) Rules -'SCRR') விதி 19(2)(b) மற்றும் செபியின் (SEBI ICDR) விதிமுறை 31 ஆகியவற்றின் கீழ் இந்த பங்கு வெளியீடு மேற்கொள்ளப்படுகிறது. செபி (SEBI ICDR) விதிகளின் விதிமுறை 6(1)-ன் படி புக் பில்டிங் (Book Building) முறையில் இந்த பங்கு வெளியீடு நடைபெறுகிறது. இதன்படி, நிகர பங்கு வெளியீட்டில் 50%-க்கு மிகாமல்
தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (QIBs) விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். இதில் புக் ரன்னிங் லீட் மேனேஜர்களுடன் (BRLMs) கலந்தாலோசித்து, தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 60% வரை ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு (Anchor Investors) விருப்பத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய நிறுவனத்திற்கு உரிமை உண்டு.

செபி (SEBI ICDR) விதிகளின்படி, ஆங்கர் முதலீட்டாளர் ஒதுக்கீட்டு விலைக்கு நிகராகவோ அல்லது அதற்கு மேலாகவோ செல்லுபடியாகும் ஏலங்கள் பெறப்படும் பட்சத்தில், ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான பிரிவில் 40% பங்குகளானது: (i) 33.33% உள்நாட்டு பரஸ்பர நிதி (Mutual Funds) நிறுவனங்களுக்கும்; மற்றும் (ii) 6.67% ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்களுக்கும் பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

குறைந்த அளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டாலோ அல்லது ஆங்கர் முதலீட்டாளர்கள் பிரிவில் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் போனாலோ, மீதமுள்ள பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்கள் பிரிவு அல்லாத பிற தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் ("நிகர QIB பிரிவு" ((“Net QIB Portion”)) சேர்க்கப்படும். மேலும், வெளியீட்டு விலைக்கு (Offer Price) நிகராகவோ அல்லது அதற்கு மேலாகவோ செல்லுபடியாகும் விண்ணப்பங்கள்
பெறப்படும் பட்சத்தில், நிகர QIB பிரிவில் 5% பங்குகள் பரஸ்பர நிதி (Mutual Funds) நிறுவனங்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள நிகர QIB பங்குகள், பரஸ்பர நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும் (ஆங்கர் முதலீட்டாளர்கள் தவிர) விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யக் கிடைக்கும். இருப்பினும், பரஸ்பர நிதி நிறுவனங்களின் மொத்தத் தேவை நிகர QIB பிரிவில் 5%-க்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில், பரஸ்பர நிதி பிரிவில் ஒதுக்கீடு செய்யப்படாமல் மீதமுள்ள Not for distribution outside India பங்குகள் மற்ற QIB முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கீடு செய்வதற்காக மீதமுள்ள நிகர QIB பிரிவில் சேர்க்கப்படும்.

மேலும், செபி (SEBI ICDR) விதிகளின்படி, வெளியீட்டு விலைக்கு (Offer Price) நிகராகவோ அல்லது அதற்கு மேலாகவோ செல்லுபடியாகும் விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில்:
(a) நிகர பங்கு வெளியீட்டில் 15%-க்கு குறையாமல் நிறுவன சாரா முதலீட்டாளர்களுக்கு (Non-Institutional Bidders) ஒதுக்கீடு செய்யப்படும் (இதில் மூன்றில் ஒரு பங்கு ₹0.20 மில்லியனுக்கு மேல் ₹1.00 மில்லியன் வரையிலான
ஏலங்களுக்கும், மூன்றில் இரண்டு பங்கு ₹1.00 மில்லியனுக்கு மேலான ஏலங்களுக்கும் ஒதுக்கி வைக்கப்படும்); மற்றும் (b) நிகர பங்கு வெளியீட்டில் 35%-க்கு குறையாமல் சில்லறை தனிநபர் முதலீட்டாளர்களுக்கு (Retail Individual Bidders) ஒதுக்கீடு செய்யக் கிடைக்கும். ஆங்கர் முதலீட்டாளர்களைத் தவிர்த்து மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும், தங்களுடைய ஏலத் தொகைக்கு ஏற்ப சுய சான்றளிக்கப்பட்ட சிண்டிகேட் வங்கிகள் (Self Certified Syndicate Banks (“SCSBs”)) அல்லது ஸ்பான்சர் வங்கிகளால் ஒதுக்கப்படக்கூடிய செய்யப்படக்கூடிய வகையில், தங்களின் ASBA கணக்கு விவரங்கள் மற்றும் UPI விண்ணப்பதாரர்களாக இருக்கும் பட்சத்தில் UPI ID விவரங்களை வழங்கி, ASBA (Application Supported
by Blocked Amount) நடைமுறையின் மூலமாகவே இந்த பங்கு வெளியீட்டில் கட்டாயமாகப் பங்கேற்க வேண்டும்.

இந்தத் தொகையானது, முதலீட்டாளர்களின் விண்ணப்பத் தொகைக்கு ஏற்ப, சுய சான்றளிக்கப்பட்ட சிண்டிகேட் வங்கிகள் (SCSBs) அல்லது ஸ்பான்சர் வங்கிகளால் பிளாக் (Block) செய்யப்படும்.

ஜெ.எம் ஃபைனான்ஷியல் லிமிடெட் (JM Financial Limited), ஆக்சிஸ் கேபிடல் லிமிடெட் (Axis Capital Limited) மற்றும் ஐஐஎஃப்எல் கேபிடல் சர்வீசஸ் லிமிடெட் (IIFL Capital Services Limited – முன்னதாக IIFL Securities Limited என அழைக்கப்பட்டது) ஆகிய நிறுவனங்கள் இந்த பங்கு வெளியீட்டின் புக் ரன்னிங் லீட் மேனேஜர்களாகச் (Book Running Lead Managers) செயல்படுகின்றன.