Tamilசெய்திகள்

இன்று நாடு முழுவதும் மருந்துகடைகள் முழு அடைப்பு போராட்டம்!

ஆன்லைன் மருந்து விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் முறையற்ற லாப சதவீதங்களையும், அதிகமான தள்ளுபடி சலுகைகளையும் கட்டுப்படுத்த வேண்டும், போலி மருந்து விற்பனையை தடுக்க வேண்டும், தூக்க மாத்திரைகள் மற்றும் கருகலைப்பு மருந்துகளை சட்டவிரோதமாக விற்பதை தடுக்க வேண்டும், மின் மருந்தகச் செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் நிறுத்தத்திற்கு, அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் சுமார் 12.4 லட்சம் மருந்தக உரிமையாளர்கள் பங்கேற்பதால் இன்று நாடு முழுவதும் மருந்து கடைகள் அடைக்கப்படுகின்றன.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் மருந்தகங்கள் உள்பட தமிழ்நாட்டின் உரிமம் பெற்ற சுமார் 42 ஆயிரத்துக்கும்திகமான மருந்து கடைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன. இதனால் மருந்து விநியோகம் இன்று பாதிக்கப்பட்டுள்ளது.