காதலுருடன் பிறந்தநாள் கொண்டாடிய நயந்தாரா!
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. இருவரும் லிவிங் டுகெதர் பாணியில் தனிக்குடித்தனம் நடத்துவதாகவும் செய்தி பரவுகிறது. இருவரும் அதை மறுக்காத நிலையில் ஜோடியாக புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.
நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விக்னேஷ் சிவனுடன் நள்ளிரவு லேடி சூப்பர் ஸ்டார் நயன் என்று எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார். மேலும் அலங்கரிக்கப்பட்ட ‘தங்கமே’ என்ற பெயர் பலகையும் இடம் பெற்றிருந்தது.
நயன்தாராவின் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வருகிறார்கள். ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படக்குழுவினர் நயன்தாராவின் பர்ஸ்லுக் போஸ்டரையும் வெளியிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார்கள்.