Tamilசெய்திகள்

முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் தொழில் நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின

தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவன (Guidance Tamil Nadu) வளாகத்தில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் பல்வேறு முன்னணித் தொழில் நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின.

மாநிலத்தில் தொழில் முதலீடுகளை அதிகப்படுத்தி இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தங்கள் மூலம், சுமார் 1,500 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் போது தமிழ்நாட்டை $1.5 Trillion பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கு குறித்த வரைபடத்திலும் முதலமைச்சர் கையொப்பமிட்டார்.

தொழிற்துறை தலைவர்களுடன் விரிவான கலந்தாலோசனையும், வழிகாட்டி நிறுவன ஊழியர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்ட இந்நிகழ்வு, தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கும் மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.