பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். தேர்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இந்த உரையில் மிக முக்கியமான அறிவிப்புகள் அல்லது நாட்டு மக்களுக்கான வேண்டுகோள்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாகப் பிரதமர் இரவு நேரங்களில் உரையாற்றும் போது பணமதிப்பிழப்பு அல்லது ஊரடங்கு போன்ற அதிரடி முடிவுகள் வெளியானது நினைவிருக்கலாம்; இதனால் இன்றும் அது போன்ற பெரிய அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா அல்லது தேர்தல் தொடர்பான செய்தியாக இருக்குமா என இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
