தமிழக மக்களுக்காக 6 முக்கிய உத்தரவாதங்களை அறிவித்த ராகுல் காந்தி!
இந்தியாவிற்கே முற்போக்கான வளர்ச்சி, சமூக நீதி மற்றும் சமத்துவப் பாதையைத் தமிழ்நாடுதான் காட்டிக்கொண்டிருக்கிறது என்று புகழாரம் சூட்டியுள்ள ராகுல் காந்தி, இந்தத் திராவிட மாடலை மேலும் வலுப்படுத்தத் தமிழக மக்களுக்காக 6 முக்கிய உத்தரவாதங்களை அறிவித்துள்ளார்.
இதன்படி, பெண்களுக்கு மாதம் ₹2,000, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ₹2,000, கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ₹2,000 கல்வி உதவித்தொகை, குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய மாதம் ₹2,500 நிதி உதவி, அரசு காலிப்பணியிடங்கள் 300 நாட்களில் நிரப்பப்படுவதோடு சி மற்றும் டி பிரிவு பணிகளில் தமிழர்களுக்கு 60% இடஒதுக்கீடு மற்றும் முதல்முறை சொத்து வாங்கும் பெண்களுக்குப் இலவசப் பத்திரப் பதிவு ஆகிய அதிரடித் திட்டங்களை அவர் வாக்குறுதியாக அளித்துள்ளார்.
பாஜகவின் தாக்குதலில் இருந்து தமிழகத்தின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் மக்களைப் பாதுகாக்க ‘இந்தியா’ கூட்டணி என்றும் துணை நிற்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
