இந்திய ஏ அணியில் இருந்து ரோகித் சர்மா விடுவிப்பு
ரஹானே தலைமையிலான இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் நிறைவடைந்ததும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும் இந்திய ‘ஏ’ அணியுடன் இணைந்து 16-ந்தேதி மவுன்ட் மாங்கானுவில் தொடங்கும் முதலாவது 4 நாள் போட்டியில் ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு அறிவுறுத்தியது. இதை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை ‘ஏ’ அணியில் இருந்து நேற்று விடுவித்தது.
20 ஓவர் போட்டித் தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி நாளை மறுதினம் மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது. அந்த அணியுடன் இணைந்து ரோகித் சர்மாவும் கிளம்புவார்.