Tamilசெய்திகள்

புதிய ஐபோன் 18 தொடர் விற்பனை இந்தியாவில் தொடக்கம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 18 தொடர் (iPhone 18 Series) விற்பனை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில், மும்பையில் நீண்ட வரிசையில் காத்திருந்து முதல் போனை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், தான் மிகவும் திருப்தியடைவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

புதிய தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வெளியாகியுள்ள இந்த ஐபோன் 18 மாடல்களை வாங்குவதற்காக மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ஆப்பிள் முதன்மை விற்பனை நிலையங்களின் (Apple Stores) முன் நள்ளிரவு முதலே நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.