Tamilசெய்திகள்

இந்தியாவிற்கு மாடலாய் மாறி உள்ளது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இந்தியாவிற்கு மாடலாய் மாறியுள்ளது, என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாது.

விருதுநகரில் சந்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வர் கூறியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் பல வளர்ச்சி பணிகளை செய்துள்ளோம். விருதுநகர் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் 40 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை கேட்டு தமிழ்நாட்டு தாய்மார்கள் எல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

ரூ.8000 கூப்பன் திட்டத்தில் இல்லத்தரசிகள் தங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

இந்தியாவுக்கு மாடலாய் மாறி உள்ளது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.