42,000 டன் எல்பிஜி எரிவாயுடன் குஜராத் வந்தடைந்த ஜாக் வசந்த் கப்பல்!
ஈரான் – இஸ்ரேல், அமெரிகா இடையே கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய போர், தற்போது ஒரு மாதத்தை நிறைவு செய்ய உள்ளது. இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்அட்டு எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உலக நாடுகள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன.
உலகின் 20 சதவீத எண்ணெய் தேவையை பூர்த்தி செய்து வந்த ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியே எதிரிகள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி மறுத்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
அந்த வகையில், சுமார் 42,000 டன் எல்.பி.ஜி எரிவாயுடன் ஜாக் வசந்த் என்ற கப்பல் இன்று குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்தது. சமீபத்திய நாட்கலில் இந்தியாவிற்கு பாதுகாப்பாக 3 வது எல்பிஜி கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
