கூடங்குளத்தின் 3 வது அணு உலையின் சோதனை ஓட்டம் தொடங்கியது!
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 3-வது அணு உலையின் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதன் மிக முக்கியமான கட்டமான அணு உலைக்குள் நீர் பாய்ச்சும் (Hydro-test) பணி வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.
ரஷிய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அணு உலையில், அனைத்துக் கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையைச் சரிபார்க்கும் வகையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நீர் பாய்ச்சும் பணி வெற்றிகரமாக முடிவடைந்தால், அடுத்தகட்டமாக எரிபொருள் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்பதால் இது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
