Tamilசெய்திகள்

அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தால் பயன் பெற்ற மாணவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்!

அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வெளிநாட்டில் மேற்படிப்பு பயிலத் தகுதி பெற்றுள்ள பாரதிதாசன் என்னும் மாணவர், திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்துத் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

விளிநிலையில் உள்ள மாணவர்களும் உலகளாவிய உயர் கல்வி வாய்ப்புகளைப் பெற்றுப் பயனடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் முந்தைய திராவிட மாடல் அரசால் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், பொருளாதாரச் சுமையின்றித் தனது கனவுக் கல்வியைத் தொடரவிருக்கும் அந்த மாணவரை உதயநிதி ஸ்டாலின் அன்போடு வாழ்த்திப் பாராட்டியுள்ளார்.