Tamilசெய்திகள்

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் கந்த சஷ்டி கவசம் மறைக்கப்பட்டதால் பரபரப்பு!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இருக்கும் அரசியல் கட்சி பேனர்கள் மற்றும் கட்சி தலைவர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டு வருவதோடு, வாகன சோதனைகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலின் உபயிலான கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவில் கந்தசஷ்டி கவசம் அடங்கிய கல்வெட்டுகளை பணியாளர்கள் மறைத்தனர். தொடர்ந்து கோயிலில் நடந்த திருப்பணி உபயோதாரர்களின் பெயர்களும் மறைக்கப்பட்டன.

இதையடுத்து கொடைக்கானல் இந்து முன்னணியினர், பா.ஜா.வினர் கோயிலில் இது குறித்து கேள்வி எழுப்பினர். இதையடுத்து இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மறைக்கப்பட்ட கந்த சஷ்டி கவசம், உபயதாரரின் பெயர்கள் மறைக்கப்பட்ட பேப்பர்கள் அகற்றப்பட்டன. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மற்ற கோயில்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.