CMCHIS திட்டத்தில் நீரிழிவு விழித்திரை நோய்க்கு இலவச சிகிச்சை அளிக்கும் வாசன் கண் மருத்துவமனை!
சென்னை ஹி.ச வாசன் கண் மருத்துவமனை, முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டமான CMCHIS-இன் கீழ் நீரிழிவு விழித்திரை நோய்க்கு இலவச சிகிச்சை வழங்கி வருகிறது. இந்த நோய், நீரிழிவு காரணமாக விழித்திரை இரத்த நாளங்கள் சேதமடைந்து, சிகிச்சையில்லாமல் விட்டால் நிரந்தர பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடும்.
இது குறித்து டாக்டர் பி. அசோகன், மெடிக்கல் ரெடினா நிபுணர் கூறுகையில், “நீரிழிவு நோயாளிகள் ஆண்டுதோறும் விழித்திரை பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்; ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் பார்வையை பாதுகாக்கலாம்.” என்றார்.
பார்வை இழப்புக்கான முக்கிய காரணங்கள்:
விழித்திரை வீக்கம் மற்றும் இரத்தப்போக்கு.லேசர் சிகிச்சை மற்றும் கண் ஊசி சிகிச்சை ஆகியவை முக்கிய சிகிச்சை முறைகளாகும்.
அறிகுறிகள்:
திடீர் மங்கிய பார்வை, கருமையான புள்ளிகள், சிதைந்த நிறங்கள்.இந்த நோய் தென் தமிழ்நாட்டில் அதிகம் காணப்படுகிறது. இந்தியாவில், 2019-இல் 77 மில்லியன் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2045-இல் 134 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில் 20% பேர் விழித்திரை நோயால் பாதிக்கப்பட, அதில் 10% பேர் பார்வை இழப்பை சந்திக்கிறார்கள்.
CMCHIS திட்டத்தில், கண்புரை, பிறவிக்கண் குறைபாடுகள், கண்ணழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.
தகுதி பெற தேவையான ஆவணங்கள்:
CMCHIS அட்டை, ஆதார், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ்.
இவை கொண்டு தாலுகா அலுவலகம் அல்லது இ-சேவை மையங்களில் பதிவு செய்யலாம்.
இலவச சிகிச்சை வழங்கும் கிளைகள்:
சென்னை, ஈரோடு, சேலம், ஓசூர், மதுரை
மருத்துவர்கள்:
டாக்டர் கௌஷிக், டாக்டர் அசோகன், டாக்டர் ரவிசங்கர், டாக்டர் சரண்யா, டாக்டர் நிவேதா, டாக்டர் ரஞ்சிதா.
இந்த சிகிச்சை திட்டம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நோயை கட்டுப்படுத்த உதவும் என வாசன் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
