தமிழக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடிகர் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மட்டும் குறைந்தபட்சம் 6 லட்சம் கோடி நிதி தேவைப்படும். தமிழக அரசின் நிதி நிலைமையை பொருத்தவரை 11 லட்சம் கோடி கடனில் திமுக அரசு தமிழகத்தையும், தமிழக மக்களையும் தத்தளிக்க வைத்துள்ளது.
கடன் இல்லாத தமிழகத்தை, வளமான வளர்ச்சிக்கான வலிமையான தமிழகத்தை உருவாக்கும் வல்லமை படைத்த டபுள் இன்ஜின் ஆட்சி தமிழகத்தில் அமைய விடக்கூடாது என்று திமுக பாணியில் தமிழக வாக்காளர்களை திசை திருப்ப நடிகர் விஜய் ஆடும் அரசியல் சதுரங்க வேட்டை தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நாடகம் எடுபடாது.
நடிகர் விஜய் வழக்கமாக திரைக்கதை அமைப்பில் தேர்ந்தவராக இருப்பதால், சினிமா பாணியில் சென்டிமென்டாக பேசி, தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி விட வேண்டும் என்று தேர்தல் அறிக்கை சீன்களை விதவிதமாக அமைத்து, 11 லட்சம் கோடி கடன் இருக்கின்ற தமிழக அரசின் நிதிநிலை சூழ்நிலையில், நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்ற பார்க்கின்றார்.
தேர்தல் அறிக்கை என்கிற பெயரில், லாட்டரி விற்கும் நபர் போல, லாட்டரி சீட்டு வாங்குங்கள் கோடீஸ்வரர் ஆவிர்கள் இன்று ஆசை வார்த்தைகளை லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்வது போல், எனக்கு வாக்களியுங்கள், உங்களை லட்சாதிபதி ஆக்குகிறேன் என்கிற பாணியில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் விஜய் லாட்டரி அரசியல் வியாபாரத்திற்கு தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டு, மாணவர், இளைஞர், பெண்கள் என தனது ரசிகர்களை குறி வைத்து வாக்காளர்களை கவரும் வகையில், எண்ணற்ற அறிவிப்புகளை வித்தியாசமாக பேசி வெளியிட்டு, அனைத்து மாநில லாட்டரி சீட்டுகளை விற்பவர்கள் போல, அனைத்துக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட விஷயங்களை, இரண்டு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை ஒவ்வொரு விஷயத்தையும் அதிகப்படியாக அறிவித்து விட்டால், தமிழக மக்கள் தனக்கு வாக்களித்து விடுவார்கள் என்று பகல் கனவு காண்கிறார்.
தேர்தல் அறிக்கை என்பது மக்களின் அடிப்படை வாழ்வுரிமை விஷயங்களில் ஒரு அரசியல் கட்சி ஆட்சி அமைக்கும் போது மாநிலத்தின் நிதி நிலைமையை பொறுத்து தான் வழங்க முடியும்.
வாக்கு வங்கி அரசியலுக்காக தேர்தல் வாக்குறுதி அறிவித்து விட்டதால் ஒரு கையெழுத்தை உடனடியாக போட்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து செயல்படுத்த முடியாது.
இதைத்தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் 2021 தேர்தலின் போது நடிகர் விஜய் தற்பொழுது 2026 சட்டமன்றத் தேர்தலில் கொடுத்துள்ள பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் போல், ஏமாற்ற மாட்டேன் என்று இனிக்கி இனிக்க பேசி ஆட்சியைப் பிடித்தார்.
திராவிட மாடல் திமுக ஆட்சி அமைந்த உடன் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் நிதி அமைச்சர் இருந்த பொழுது, தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று வெளிப்படையாக பேசினார்.
மேலும் திமுக ஆட்சியாளர்களும் அவர்களின் குடும்பங்களும் அமைச்சர்களும் தமிழக மக்களை எப்படி ஏமாற்றி கொள்ளை அடிக்கிறார்கள் என்பது ஆடியோ வெளியிட்டதால் நிதி அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தேர்தல் வாக்குறுதிகளை நீண்ட காலம் நிறைவேற்ற முடியாமல், அதிமுகவும், தமிழக பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளும் தொடர்ச்சியாக தட்டிக் கேட்டதால், சுட்டிக்காட்டியதால் மூன்றாண்டுகளுக்கு பிறகு மகளிர் உரிமைத்தொகை ஒரு சில திட்டங்களை மட்டும் நிறைவேற்றினர்.
அதுவும் மத்திய அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அளித்த நிதியை மடை மாற்றி தவறாக பயன்படுத்தி திமுக அரசு பெண்களுக்கு உரிமைத் தொகையும், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் மத்திய அரசு தமிழக அரசு திட்டங்களுக்கு ஒதுக்கிய திதியில் இருந்து தான் திமுக அரசு வழங்கியது.
அதிலும் குறிப்பாக பட்டியல மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு, அவர்களின் அடிப்படை உரிமைகள் அடிப்படை வசதிகளுக்காக, வளர்ச்சிக்காக கொடுக்கப்பட்ட 1850 கோடி ரூபாய் நிதியையும் திமுக அரசு திருடி தேர்தல் வாக்குறுதிக்காக மறைமுகமாக செலவிட்டது.
எனவே திமுக தலைவர் ஸ்டாலின் வழியில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் தற்பொழுது பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை, தோல்வி பயத்தில், எப்படியாவது நடிகர் விஜயகாந்த் விட அதிகமாக பத்து சதவீத வாக்குகளை பெற்று விட வேண்டும் இன்று பதட்டத்துடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது மக்களை முற்றிலும் ஏமாற்றும் தேர்தல் அறிக்கை. தேர்தல் கமிஷன் இதுபோன்ற தேர்தல் அறிக்கையில் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை அளிக்க வேண்டும்.
விஜய் அவர்களின் தேர்தல் அறிக்கையில் எந்த விதமான தொலைநோக்கு திட்டங்கள், மக்கள் நல திட்டங்கள் இல்லை. தன் கையால் ஒரு விவசாயிக்கு முதல் தேர்தல் அறிக்கை அளித்தேன் என்று கூறும் விஜய் விவசாயத்தின் மறுமலர்ச்சிக்கு, கைகளின் உயர்வுக்கு, மகிழ்ச்சிக்கு எந்த விதமான தொலைநோக்கு திட்டங்களையும் குறிப்பிடவில்லை.
அதிமுக பாஜக தேர்தல் அறிக்கையின் சில பகுதிகளை மட்டும் காப்பியடித்து வெளியிட்டு இருப்பதன் மூலம் நடிகர் விஜய் இன்னும் கூட திருந்தவில்லை மக்கள் நல அரசியல்வாதியாக மாறவில்லை என்பதை தெளிவாக மக்களுக்கு உணர்த்திவிட்டார்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத தீய சக்தி திமுகவை பாஜக அதிமுக அங்க வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி வீழ்த்தி தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் டபுள் இன்ஜின் ஆட்சி அமையும். வளர்ச்சி பாதையில் செல்லும். விஜயின் மக்கள் விரோத லாட்டரி நாடக அரசியல் இனி எடுபடாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.