புதுமை நிகழும் போதெல்லாம் புதிய வாய்ப்புகள் உருவாகும் – ஏஐ மீதான அச்சத்தை போக்கிய பிரதமர் மோடி
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக தொழில்நுட்ப துறையில் வேலையிழப்பு குறித்து அதிக அச்சம் நிலவி வருகிறது. டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி ஏ.என்.ஐ. (ANI) செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தொழில்நுட்பத்தால் வேலை அழிந்துவிடாது என்பதை வரலாறு காட்டுகிறது. அதன் இயல்பு மாறுகிறது மற்றும் புதிய வகையான வேலைகள் உருவாக்கப்படுகின்றன. சில வேலைகள் மறுவரையறை செய்யப்படலாம் என்றாலும், டிஜிட்டல் மாற்றம் இந்தியாவின் பொருளாதாரத்தில் புதிய தொழில்நுட்ப வேலைகளையும் சேர்க்கும்.
பல நூற்றாண்டுகளாக புதுமை மற்றும் தொழில்நுட்ப புரட்சிகள் வேலைகளை அழித்துவிடும் என்ற அச்சம் உள்ளது. இருப்பினும், புதுமை நிகழும் போதெல்லாம் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்பதை வரலாறு நமக்குக் கற்பிக்கிறது. AI யுகத்திலும் இதுவே உண்மையாக இருக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
