Uncategorized

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை உள்ளடக்கிய வங்காளதேஷ வரைபடம்!

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா சமீபத்தில் வங்கதேசம் சென்றிருந்தார். அங்கு தலைநகர் டாக்காவில் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸை சந்தித்தார்.

இந்நிலையில் முகமது யூனுஸ், சாஹிர் மிர்சாவுக்குப் பரிசாக அளித்த புத்தகத்தின் அட்டைப்படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்தப் புத்தகத்தின் அட்டைப்படத்தில், இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கிய ‘கிரேட்டர் பங்களாதேஷ்’ பகுதியாக வங்கதேசம் காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, வடகிழக்கு மாநிலங்கள் குறித்து யூனுஸ் பேசிய கருத்துக்களுக்குப் பதிலடியாக, வங்கதேசத்துக்கான போக்குவரத்து ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.