இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்களை நிராகரித்த கனடா
கனடாவில் குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் கொண்டு வந்தது. இதில் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை அதிரடியாகக் குறைத்தது.
இந்நிலையில், தற்காலிகமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், மாணவர் விசாக்கள் தொடர்பான மோசடிகளைக் குறைக்கவும் தொடர்ந்து 2-வது ஆண்டாக சர்வதேச மாணவர்களுக்கான அனுமதியை கனடா அரசு குறைத்துள்ளது.
கனடாவின் உயர்கல்வி நிலையங்களில் படிக்க அனுமதி கோரிய இந்திய மாணவர்களின் விண்ணப்பங்களில் சுமார் 74 சதவீதம் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
