Tamilசெய்திகள்

மஹேந்திராவுடன் இணைந்து சென்னை, வேளச்சேரியில் முதல் ஷோருமை திறந்த ஜுபிலன்ட் மோட்டார்வொர்க்ஸ்!

17 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட, இந்தியாவின் முன்னணி வாகன விற்பனைக் குழுக்களில் ஒன்றான Jubilant MotorWorksPvt. Ltd., வேளச்சேரியில் தனது முதன்மை Mahindra ஷோரூமின் பிரம்மாண்டமான திறப்பு விழாவுடன் சென்னையில் தனது அதிகாரப்பூர்வ வருகையைப் பதிவு செய்தது.

இந்த மைல்கல், Mahindra & Mahindra நிறுவனத்துடனான ஒரு உத்திசார் கூட்டாண்மையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இக்கூட்டாண்மையின் மூலம், Mahindra-வின் புகழ் பெற்ற SUV-க்கள், அடுத்த தலைமுறை மின்சார வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் அடங்கிய தொகுப்பு சென்னை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வரப்படுகிறது — இதற்கு Jubilant-இன்நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் உயர்தர வாடிக்கையாளர் அனுபவம் மீதான அர்ப்பணிப்பு உறுதுணையாக அமைகிறது.

இந்தத் திறப்பு விழாவில், Mahindra & Mahindra நிறுவனத்தின் விற்பனை, வாடிக்கையாளர் சேவை மற்றும் வாடிக்கையாளர் அனுபவப் பிரிவின் மூத்த துணைத் தலைவரும் (SVP) தலைவருமான பவன்குமார், திரைப்பட நடிகை அம்மு அபிராமி, Jubilant Motor Works-இன் மூத்த நிர்வாகக் குழுவினருடன் இணைந்து சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் மாலைப்பொழுது, கலை மற்றும் கொண்டாட்டத்தின் துடிப்பான கலவையாக அமைந்தது. பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழா, வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்ற சடங்கு, ரிப்பன் வெட்டுதல் மற்றும் குத்துவிளக்கு ஏற்றுதல் ஆகியவற்றுடன் தொடர்ந்தது — இவை அனைத்தும் ஒரு மங்கலமான தொடக்கத்தை அடையாளப்படுத்தின.

இந்நிகழ்வில் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்குச் சாவிகள் மூலம் முறைப்படி ஒப்படைக்கும் விழாவும் நடைபெற்றது; இது சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுடனான Jubilant Mahindra-வின் பயணத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாக அமைந்தது.

இந்நிகழ்வில் பேசிய Jubilant MotorWorks-இன் குழும முதன்மைச் செயல் அதிகாரி (Group CEO) சுனில்பாய், “சென்னையில் எங்களின் வருகை, Jubilant MotorWorks-இன் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். புதுமை, செய திறன்ம ற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழும் Mahindra நிறுவனத்துடன் கைகோர்ப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். வேளச்சேரியில் அமைந்துள்ள எங்களின் முதன்மை ஷோரூம் மற்றும் நகரம் முழுவதும் பரவியுள்ள வலுவான சேவை வலையமைப்பு ஆகியவற்றின் துணையுடன், சென்னை மக்களுக்குத் தடையற்ற மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சிறந்த வாகன அனுபவத்தை வழங்க நாங்கள் இலக்கு கொண்டுள்ளோம்.” என்று தெரிவித்தார்.

சென்னையில் தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, Jubilant Mahindra நிறுவனம் வேளச்சேரி, நந்தனம் மற்றும் நாவலூர் ஆகிய இடங்களில் விற்பனை ஷோரூம்களை இயக்கும். இவற்றுக்குத் துணையாக வேளச்சேரி, கீழ்க்கட்டளை மற்றும் கேளம்பாக்கம் ஆகிய இடங்களில் சேவை மையங்களும் செயல்படும். இதன் மூல ம்நகரம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவையும் வசதியும் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. வலுவான உள்கட்டமைப்பு மற்றும் நம்பிக்கைக்குரிய பாரம்பரியத்தின் துணையுடன், மிகச்சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் முழு கவனம் செலுத்தி வரும் Jubilant MotorWorks, சென்னையில் வாடிக்கையாளர்கள் விரும்பித்தேர்ந்தெடுக்கும் ஒரு முதன்மையான வாகன விற்பனை மையமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இலக்கு கொண்டுள்ளது.