Tamilசெய்திகள்

’அன்பு அக்காவின் மக்கள் பயணம்’ என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை செய்யும் தமிழிசை செளந்தரராஜன்

மயிலாப்பூர் தொகுதியின் பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று (12.04.2026, ஞாயிற்றுக்கிழமை) தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார். “அன்பு அக்காவின் மக்கள் பயணம்” என்ற பெயரில் நடைபெறும் இந்தப் பரப்புரை, மயிலாப்பூரின் முக்கியப் பகுதிகளில் நடைபெறுகிறது.

பயணத் திட்டத்தின் முக்கியப் பகுதிகள்:

காந்தி சிலை, காப்பர் பேஷன் காலனி மற்றும் பக்தவச்சலம் தெரு.

பாரதியார் தெரு, வ.உ.சி. தெரு, காமராஜர் தெரு மற்றும் திருவள்ளுவர் சாலை.

எல்தாம்ஸ் சாலை (டி.டி.கே ரோடு, ஏஆர் காலனி, எச்டி ராஜா தெரு).

ராமலிங்கேஸ்வரர் கோயில் தெரு, பெய்யார் சாலை மற்றும் ஜெகநாதன் தோட்டம்.

அண்ணா சாலை சந்திப்பு, காமெட் சந்திப்பு மற்றும் வெங்கட்ராமன் தெரு.

தாமரை சின்னத்திற்கு வாக்குச் சேகரிக்கும் வகையில், மயிலாப்பூர் தொகுதி முழுவதும் இன்று விரிவான பரப்புரை நடைபெறுகிறது.