2025-26 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது
2025-26 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்குகளை (ITR) தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளை (ஜூலை 31) முடிவடையும் நிலையில், நாடு முழுவதும் இதுவரை 4 கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது வருமான வரிக் கணக்குகளை வெற்றிகரமாகத் தாக்கல் செய்துள்ளனர்.
கடைசி நேரத்தில் ஏற்படும் இணையதள நெரிசல், தொழில்நுட்பத் தடங்கல்கள் மற்றும் தாமதக் கட்டணங்கள் போன்ற அபராதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, தகுதியுடைய அனைத்து வரி செலுத்துவோரும் உடனடியாகத் தங்களின் வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்து மின்னணு முறையில் சரிபார்க்குமாறு வருமான வரித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
குறித்த கெடுவுக்குள் கணக்கு தாக்கல் செய்யத் தவறினால் சட்டப்படியான அபராதம் மற்றும் வட்டி வசூலிக்கப்படும் என்பதால், கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்த்து விரைந்து தாக்கல் செய்வதே சிறந்தது.
