‘வெற்றித் தறி’ விற்பனையகத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய்
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் “வெற்றித் தறி” என்ற பிரத்யேகப் புதிய விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தை (e-commerce platform) முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்து, HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சியையும் பார்வையிட்டார்.
தமிழக நெசவாளர்களின் உயர் ரகத் தயாரிப்புகளை சர்வதேச அளவில் நேரடியாக விற்பனை செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த உயர்தரக் கோ-ஆப்டெக்ஸ் பிரீமியம் விற்பனை மையங்கள் நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளன.
மேலும், இந்த விழாவில் 2025–2026-ஆம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் சிறந்த வடிவமைப்பாளர் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட 11 விருதாளர்களுக்கு மொத்தம் ₹22.25 லட்சத்திற்கான காசோலைகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் முதலமைச்சர் வழங்கிச் சிறப்பித்தார்.
