அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
சட்டப்பேரவை வளாகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து கட்சி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருவதாகவும், 47 தொகுதிகளில் பெற்ற வெற்றி எடப்பாடியின் சொந்த செல்வாக்கால் கிடைத்தது என்றால் மீதமுள்ள 181 தொகுதிகளில் அவர் செல்வாக்கை இழந்துவிட்டாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொந்த மாவட்டமான சேலத்திலேயே அதிமுக தோல்வியடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் வெற்றிக்குத் தலைவரும் தோல்விக்கு மாவட்டச் செயலாளர்களுமே காரணம் எனக் கூறுவது நியாயமற்றது என்று தெரிவித்தார்.
மேலும் கூட்டணி விவகாரம், நிதி ஒதுக்கீடு செய்யாதது மற்றும் தினகரன், தேமுதிக போன்ற கட்சிகளைத் திட்டமிட்டு கூட்டணியில் இருந்து வெளியேற்றியதே சென்னை, டெல்டா, தென் மாவட்டங்களில் கட்சி பின்னடைவைச் சந்திக்கக் காரணம் என ஆவேசமாகத் தெரிவித்தார்.
