100 நாட்களை நிறைவு செய்த த.வெ.க அரசு – முதலமைச்சர் விஜய் வெளியிட்ட சாதனை வீடியோ
தமிழகத்தில் தவெக அரசு அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, “100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” எனக் குறிப்பிட்டு, லஞ்ச ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கி நிறைவேற்றப்பட்ட முக்கிய மக்கள் நலத் திட்டங்களைப் பட்டியலிட்டு முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு ரூ.6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 மற்றும் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,750 சிறப்பு ஊக்கத்தொகை, ‘வெற்றி வீடு’ திட்டத்திற்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு, ‘வெற்றி மடிக்கணினி’ திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டிலுடன் கூடிய பிராண்டட் மிதிவண்டிகள் வழங்கல், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் (ரூ.710 கோடி), 150 நாட்கள் உத்தரவாத வேலைவாய்ப்பு அளிக்கும் ‘வெற்றி 150’ திட்டம், ‘அண்ணனின் சீர்’ திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டம் (ரூ.812 கோடி), கிராமப்புற மேம்பாட்டிற்கான ‘TN-VETTRI’ திட்டம் (ஆண்டிற்கு ரூ.6,000 கோடி), 13 லட்சம் இளைஞர்களுக்கான ‘வெற்றித் திறன் பயிற்சி’ திட்டம், போதைப்பொருளை ஒடுக்க 65 சிறப்பு அதிரடிப்படைகள் அமைப்பு மற்றும் நேரடித் தொடர்பற்ற ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறை உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் விவரிக்கப்பட்டுள்ளன.
