Tamilசெய்திகள்

புதிய ஏசி மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை முறைப்படி தொடங்கி வைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய்

தமிழ்நாட்டின் பொதுப்போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகப் புதிய குளிரூட்டப்பட்ட (AC) மின்சாரப் பேருந்துகள் (Electric Buses) இன்று முறைப்படி தொடக்கி வைக்கிறார்.

நகர்ப்புற காற்று மாசுபாட்டைக் குறைத்துச் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படும் இந்த அதிநவீன மின்சாரப் பேருந்துகள், முழுமையான குளிரூட்டப்பட்ட வசதி, சொகுசு இருக்கைகள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறி இறங்கும் வகையிலான தாழ்தளக் கட்டமைப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பிற்காகச் சிசிடிவி கேமராக்கள், ஜிபிஎஸ் நேரலைக் கண்காணிப்பு, அவசர கால பொத்தான்கள் ஆகிய பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன.

டிஜிட்டல் பயணச்சீட்டு வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்துகள் பொதுமக்களுக்குப் புகையற்ற, சத்தமில்லாத மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதோடு, தமிழகத்தின் பொதுப்போக்குவரத்துச் சேவையை அடுத்தகட்டப் பசுமைப் புரட்சியை நோக்கி எடுத்துச் செல்லும் முக்கியத் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.