Tamilசெய்திகள்

வந்தே பாரதம் நிகழ்ச்சியில் இந்தியாவின் மிக முக்கியமான சவால்களுக்குத் தீர்வுகாணும் 9 தொடக்க நிறுவனங்கள் அறிமுகம்!

வந்தே பாரதம் — இந்தியாவின் அடித்தளப் புதுமைப்படைப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோரைக் கண்டறிந்து அவர்களைக் கொண்டாடுவதற்கான திரு. கௌதம் அதானியின் நாடு தழுவிய இந்த முயற்சி, அதன் 3, 4 மற்றும் 5-ஆம் அத்தியாயங்களுடன் தனது தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடர்ந்து முடித்துள்ளது. இதில், ஆர்சனிக் கலந்த நிலத்தடி நீர் சிக்கல், கிராமப்புற மகரந்தச்சேர்க்கை மற்றும் கடைக்கோடி மக்களுக்குமான நோய்க்கணிப்பு சேவைகள் என இந்தியாவின் மிக முக்கியமான சில சவால்களுக்குத் தீர்வுகாணும் ஒன்பது தொடக்க நிறுவனங்கள் (Startups) அறிமுகப்படுத்தப்பட்டன. அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரணவ் அதானி; ரோசானா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அன்குர் தஹியா; வென்ச்சர் கேடலிஸ்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் அபூர்வா ரஞ்சன் சர்மா; கேடியா அட்வைசரி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் விஜய் கேடியா; மற்றும் டெட்ர் காலேஜ் ஆஃப் பிசினஸ் & மாஸ்டர்ஸ் யூனியன் நிறுவனத்தின் நிறுவனர் பிரதாம் மிட்டல் ஆகியோர் அடங்கிய முதலீட்டாளர்கள் மற்றும் வழிகாட்டிகளின் குழுவின் முன் இந்த நிறுவனங்கள் தங்கள் திட்டங்களைச் சமர்ப்பித்தன.

அத்தியாயம் 3 (செப்டம்பர் 4 அன்று ஒளிபரப்பானது): நவ்மார்க், ஜன் நீதி மற்றும் பிளெண்டி

இருபதுகளின் தொடக்கத்தில் உள்ள சகோதரர்கள் இருவரால் தொடங்கப்பட்ட பீகாரைச் சேர்ந்த ‘நவ்மார்க் ரிசர்ச் அண்ட் இன்னோவேஷன்’ (Navmarg Research and Innovation) எனும் ஆழமான தொழில்நுட்ப நீர் சார்ந்த (deep-tech water) தொடக்க நிறுவனம், ‘மாரு’ (MARU) எனும் காப்புரிமை பெற்ற அமைப்பை அறிமுகப்படுத்தியது. இது இரசாயனப் பயன்பாடு ஏதுமின்றி குடிநீரில் உள்ள ஆர்சனிக்கை நீக்கும் ஒரு காந்தப் பிரித்தெடுப்பு அமைப்பாகும். இந்நிறுவனம் தனது களப் பணிகளின் மூலம் இதுவரை 31.9 லட்சத்திற்கும் அதிகமான லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கியுள்ளது. பிரணவ் அதானி, ‘வந்தே விங்ஸ்’ (Vande Wings) வழியே அதானி குழுமத்துடன் இணைந்து செயல்படுவதற்கான நிறுவன வழிகாட்டுதலை வழங்கினார். மேலும் அன்குர் தஹியா, ‘ரோசானா’ நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தி கங்கைச் சமவெளி முழுவதும் இத்தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதற்கான உதவிகளை வழங்குவதாகத் தெரிவித்தார்.

ஐஐடி கான்பூர் மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகப் முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்ட ஹரியானாவைச் சேர்ந்த ‘ஜன் நீதி’ (Jan Niti) எனும் AI கொள்கை-சிமுலேஷன் பிளாட்ஃபார்ம், அரசாங்கம் மற்றும் நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே அவற்றின் சமூக-பொருளாதார விளைவுகளைக் கணித்துக் கூறுகிறது. பிரணவ் அதானி வந்தே விங்ஸ் விருதை வழங்கியதோடு, அதானி குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் தாராவி மறுவளர்ச்சித் திட்டத்தின் மூலம் ஒரு முன்னோடித் திட்டத்தை (pilot project) செயல்படுத்துவதற்கான ஆதரவையும் அளித்தார்; அன்குர் தஹியா மூலோபாய வழிகாட்டுதல் மற்றும் கூட்டுறவை வழங்கியதோடு, அவர்களின் தற்போதைய முதலீட்டுச் சுற்றுகளில் பங்கேற்கவும் விருப்பம் தெரிவித்தார்.

எட்டு மாதங்களில் பன்னிரண்டு மடங்கு வளர்ச்சியடைந்துள்ள கேரளாவைச் சேர்ந்த ‘பிளெண்டி’ (Plenti) எனும் பகுதிசார் உபரி-உணவு சந்தை (hyperlocal surplus-food marketplace), உணவகங்கள் விற்கப்படாத உணவுகளைத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய அனுமதிக்கிறது. டாக்டர் அபூர்வா ரஞ்சன் சர்மா மேலதிகக் கலந்துரையாடல்களுக்கு நேரடியாகத் தொடர்புகொள்வதாகத் தெரிவித்தார்.

அத்தியாயம் 4 (செப்டம்பர் 5 அன்று ஒளிபரப்பானது): தாரக்ஷா எக்கோசொல்யூஷன்ஸ், ஹம்பிள் பீ மற்றும் பௌமியா இன்னோவேஷன்ஸ்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ‘ஹம்பிள் பீ’ (Humble Bee) எனும் நிறுவனம், அதன் AI தொழில்நுட்பம் கொண்ட ‘பீகைண்ட்’ (BEEKIND) தளத்தின் மூலம் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய தேனீ வளர்ப்பு நிறுவனங்களின் உரிமையாளர்களாக கிராமப்புற மற்றும் பழங்குடியினப் பெண்களை அதிகாரப்படுத்துகிறது. பிரணவ் அதானி, ‘வந்தே விங்ஸ்’ (Vande Wings) வழியே அதானி குழுமத்தின் வழிகாட்டுதலை வழங்கியதோடு, அதானியின் ஆப்பிள் பண்ணைகளில் பணியாற்றுவதற்கான சாத்தியமான வாய்ப்பையும், அதானி விமான நிலையங்களில் இணைவதற்கான வாய்ப்புகளையும் வழங்கினார்; அன்குர் தஹியா, ‘ரோசானா’ நெட்வொர்க்குகள் மூலம் கிராமப்புற இணைப்புகளுக்கான உதவிகளை வழங்கினார், அதே வேளையில் டாக்டர் அபூர்வா ரஞ்சன் சர்மா, பிந்தைய மதிப்பீட்டு அடிப்படையில் ₹5 கோடி முதலீட்டை வழங்குவதாகத் தெரிவித்தார்.

தெலங்கானாவைச் சேர்ந்த ‘பௌமியா இன்னோவேஷன்ஸ்’ (Bhaumya Innovations) எனும் வேளாண்-ஹார்டுவேர் தொடக்க நிறுவனம், டிராக்டரில் பொருத்தக்கூடிய இந்தியாவின் முதல் காப்புரிமை பெற்ற கல் சேகரிக்கும் கருவியான ‘ருத்ரா’வை (RUDRA) உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் விஜய் கேடியா மற்றும் டாக்டர் அபூர்வா ரஞ்சன் சர்மா ஆகிய இருவரிடமிருந்து பகிர்ந்தளிக்கப்பட்ட ₹2 கோடி முதலீட்டையும், இருவரிடமிருந்தும் உறுதிசெய்யப்பட்ட வழிகாட்டுதலையும் பெற்றது.

ஹரியானாவைச் சேர்ந்த ‘தாரக்ஷா எக்கோசொல்யூஷன்ஸ்’ (Dharaksha Ecosolutions) எனும் தொடக்க நிறுவனம், பயிர் வைக்கோல் கழிவுகள் மற்றும் காளான் மைசீலியம் (mycelium) ஆகியவற்றிலிருந்து மக்கக்கூடிய பேக்கேஜிங் பொருட்களைக் தயாரிக்கிறது — இது வைக்கோல் எரிப்பு மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பேக்கேஜிங் கழிவுகள் ஆகிய இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கிறது. அன்குர் தஹியா வந்தே விங்ஸ் ஆதரவையும், பேக்கேஜிங் வாய்ப்புகளை ஆராய்வதற்காக நேரில் விவாதிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கினார்; டாக்டர் அபூர்வா ரஞ்சன் சர்மா ஒரு சாத்தியமான ஒப்பந்தத்தை மதிப்பிடுவதற்காக நேரடியாகத் தொடர்புகொள்வதாகத் தெரிவித்தார்.

அத்தியாயம் 5 (செப்டம்பர் 6 அன்று ஒளிபரப்பானது): திங்கர்பெல் லேப்ஸ், பிரைமரி ஹெல்தெக் மற்றும் ஜீவாஸ்கோப்

பிட்ஸ் பிலானி (BITS Pilani) முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த ‘திங்கர்பெல் லேப்ஸ்’ (Thinkerbell Labs) எனும் கல்வி-தொழில்நுட்பத் (edtech) தொடக்க நிறுவனம், உலகின் முதல் சுய-கற்றல் பிரெய்லி கற்றல் சாதனமான ‘ஆனி’யை (Annie) உருவாக்கியுள்ளது. பிரதாம் மிட்டல், திங்கர்பெல் லேப்ஸ் அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்வையிடுவதாகவும், கூட்டுப்பணி மேற்கொள்வதாகவும் உறுதி அளித்தார்; விஜய் கேடியா, அன்குர் தஹியா மற்றும் டாக்டர் அபூர்வா ரஞ்சன் சர்மா ஆகிய மூவரும் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்தனர். மேலும், அன்குர் தஹியா ‘ரோசானா’ நெட்வொர்க் மூலம் அடித்தள அளவிலான விநியோக ஆதரவை வழங்குவதாகவும், டாக்டர் அபூர்வா ரஞ்சன் சர்மா தனது முதலீட்டாளர் சமூகத்திற்குள் இணைப்புகளை ஏற்படுத்தித் தருவதாகவும் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ‘பிரைமரி ஹெல்தெக்’ (Primary Healthtech) எனும் தொடக்க நிறுவனம், உலகின் முதல் AI அடிப்படையிலான “சூட்கேஸில் ஆய்வகம்” (lab in a suitcase) என விவரிக்கப்படும் ‘மொபிலாப்’பை (Mobilab) உருவாக்கியுள்ளது. இது ஏற்கனவே 15 மாநிலங்களில் உள்ள 300 இடங்களில் பயன்படுத்தப்பட்டு, 30 நிமிடங்களில் நோய்க்கணிப்பு முடிவுகளை வழங்கி வருகிறது. பிரதாம் மிட்டல், இந்நிறுவனம் தெரிவித்த ₹100 கோடி மதிப்பீட்டின் அடிப்படையில் ₹1 கோடி நிதியை ஒதுக்குவதாக உறுதியளித்தார்; அன்குர் தஹியா அடித்தள அளவிலான விநியோக உதவி, தயாரிப்பு சோதனை ஆதரவு மற்றும் துறை சார்ந்த இணைப்புகளை வழங்குவதாகத் தெரிவித்தார், அதே வேளையில் டாக்டர் அபூர்வா ரஞ்சன் சர்மா வழிகாட்டுதல் ஆதரவை அளிப்பதாக உறுதியளித்தார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ‘ஜீவாஸ்கோப்’ (JivaScope) எனும் தொடக்க நிறுவனம், இணைய இணைப்பு இன்றியே இதய, சுவாச மற்றும் காசநோய் (TB) பாதிப்புகளைக் கண்டறியும் இணையமில்லா (offline), AI இயங்கும் ஆஸ்கல்டேஷன் (auscultation) சாதனத்தை உருவாக்கியுள்ளது. டெல்லியில் நடைபெறும் பயோடெக் உச்சிமாநாட்டில் தனி அரங்குடன் பங்கேற்பதற்கான அழைப்பை பிரதாம் மிட்டல் இந்நிறுவனத்திற்கு விடுத்தார்.

இந்த மூன்று அத்தியாயங்களும், நடப்பு பருவத்தில் இடம்பெற்ற தொடக்க நிறுவனங்களின் பட்டியலை நீர்-தொழில்நுட்பம், காலநிலை புதுமை, வேளாண்-ஹார்டுவேர், கல்வி-தொழில்நுட்பம் மற்றும் சுகாதார-தொழில்நுட்பம் என விரிவுபடுத்தியுள்ளன. இது இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து ‘வந்தே பாரதம்’ நிகழ்ச்சிக்கு வந்த 26,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களின் பரந்த பரிமாணத்தைப் பிரதிபலிக்கிறது. இந்தத் தொடரானது செப்டம்பர் 17 அன்று நடைபெறவுள்ள அதன் மகா இறுதிப் போட்டியை (Grand Finale) நோக்கி நகர்கிறது. அதில் வெற்றிபெறுபவர்களுக்கு அதானி குழுமத்தின் ஆதரவுடன் ₹2 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.