Tamilசெய்திகள்

பட்டாசுகளுக்கு நாடு தழுவிய முழுமையான தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்துடன் பாரம்பரியக் கொண்டாட்டங்களையும் சமநிலைப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. அதன்படி, சரவெடி உள்ளிட்ட இணைக்கப்பட்ட பட்டாசுகளை (Joined Crackers) உற்பத்தி செய்வதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடுமையான சுற்றுச்சூழல் விதிகள், ரசாயனத் தரக்கட்டுப்பாடுகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளைக் கண்டிப்புடன் பின்பற்றி மட்டுமே இத்தகைய பட்டாசுகளைத் தயாரிக்கவும் வெடிக்கவும் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பசுமைப் பட்டாசுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் அதேவேளையில், பட்டாசு உற்பத்தித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் இந்த முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.