இந்திய அளவில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும் தங்கக் கடன்களில் தமிழ்நாடு முதலிடம்!
இந்தியளவில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் (NBFCs) வழங்கும் மொத்தத் தங்கக் கடன்களில் தமிழ்நாடு மட்டுமே 32% (மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாக) பங்களிப்பை வழங்கி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் (RBI) தரவுகளின்படி, தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.4.12 லட்சம் கோடி மதிப்பிலான தங்கக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. தென்னிந்தியாவைச் சேர்ந்த ஐந்து மாநிலங்கள் (தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா) இணைந்து ஒட்டுமொத்த இந்தியத் தங்கக் கடன் சந்தையில் 80% பங்கைக் கொண்டுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேசம் (13.6%), கர்நாடகா உள்ளிட்ட பிற தென்னக மாநிலங்களை விடத் தமிழ்நாடு வெகுவாக முன்னேறியுள்ளது.
மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டின் சிறு தொழில் வளர்ச்சி, விவசாயத் தேவைகள் மற்றும் அவசரக் கடன் தேவைகளுக்கு தங்கத்தை விரைவான மற்றும் எளிமையான பிணையமாகப் பயன்படுத்தும் நிதிப் பழக்கம் மக்களிடையே அதிகரித்திருப்பதே இந்த மாபெரும் வளர்ச்சிக்குக் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
