தமிழகத்தில் நல்லெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை உயர்வு
தமிழகத்தில் எள் விளைச்சல் சரிவு மற்றும் வெளிமாநில வரத்துக் குறைவு காரணமாக நல்லெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை (சுமார் 15-20%) அதிரடியாக உயர்ந்துள்ளது. தற்போது சென்னையில் 1 லிட்டர் Refined நல்லெண்ணெய் ரூ.280 – ரூ.300, செக்கு நல்லெண்ணெய் ரூ.330 – ரூ.360 மற்றும் பிரீமியம் மரச்செக்கு நல்லெண்ணெய் ரூ.430 – ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சர்வதேச சந்தை மாற்றங்களால் சூரியகாந்தி எண்ணெய் விலையும் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் சராசரியாகக் கடலை எண்ணெய் ₹210.06/கிலோ, கடுகு எண்ணெய் ₹202.96/கிலோ, சூரியகாந்தி எண்ணெய் ₹191.55/கிலோ, வனஸ்பதி ₹168.79/கிலோ, சோயா எண்ணெய் ₹167.33/கிலோ மற்றும் பாமாயில் ₹153.10/கிலோ என்ற அளவில் விற்கப்படுகின்றன.
கச்சா எண்ணெய் போக்குவரத்துச் செலவு உயர்வு மற்றும் வரவிருக்கும் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைக் காலத் தேவைகள் காரணமாக வரும் நாட்களில் சமையல் எண்ணெய்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
