Tamilசெய்திகள்

ரியா, தம்மாம் நகரங்களை இணைக்கும் விமானச் சேவைகளை நிறுத்திய ஏர் இந்தியா

மேற்காசியாவில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, சவுதி அரேபியாவின் ரியா மற்றும் தம்மாம் நகரங்களை இணைக்கும் விமானச் சேவைகளை வரும் நவம்பர் 7-ஆம் தேதி வரை ரத்து செய்வதாக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகள் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிலையங்களை குறிவைத்து தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாலும், சமீபத்திய தாக்குதல்களில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததாலும் இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் தங்களது பயணத்திற்கு முன் விமானத்தின் தற்போதைய நிலையை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.