Tamilசெய்திகள்

வாக்களித்த மக்களே புலம்பும் வகையில் தான் த.வெ.க ஆட்சி இருக்கிறது – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னையில் நடைபெற்ற கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தான் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன் கூறியது போல் அல்லாமல், தற்போது வாக்களித்த மக்களே புலம்பும் வகையில்தான் இந்த ஆட்சி நடைபெற்றுவருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையா அல்லது போதைப்பொருள் நடமாட்டமா என்ற அளவுக்குப் போட்டிகள் நிலவுவதாகவும், மேடைக்கு மேடை ‘தீய சக்தி’ எனப் புலம்புபவர் யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு புரிந்திருக்கிறது என்றும் கடுமையாகச் சாடினார்.

எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இத்தகைய அநியாய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், தான் தொடக்கத்தில் கூறியது போலவே 6 மாதங்கள் கூட நிலைக்க முடியாத சூழலில்தான் இந்த தவெக ஆட்சி போய்க்கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.