அசோக் செல்வனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த ஜனனி ஐயர்!
இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதைத் தொடர்ந்து பாகன், தெகடி, அதே கண்கள், பலூன், விதி மதி உல்டா உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு இறுதி வரை சென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர்.
தற்போது இவர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த புதிய படத்தை சந்தீப் என்பவர் இயக்க உள்ளார். மர்மம், கொலை கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார்.
அசோக் செல்வனும், ஜனனியும் ஏற்கனவே ‘தெகிடி’ படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். இப்படத்தில் இவர்களின் ஜோடி அதிகம் பேசப்பட்டது. தற்போது இரண்டாவது முறையாக இப்படம் மூலம் இணைந்திருக்கிறார்கள்.