Tamilவிளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – செரீனாவை வீழ்த்தி பியான்கா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில், அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவும் மோதினர்.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பியான்கா 6-3, 7-5 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

அறிமுக போட்டியிலேயே கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்திய 19 வயது நிரம்பிய கனடா வீராங்கனை பியான்காவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கனடா இளம் வீராங்கனைகளில் 2009-க்கு பிறகு பைனலுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பியான்கா பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *