Tamilவிளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ரோஜர் பெடரர் 4வது சுற்றுக்கு முன்னேறினார்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர் பிரிட்டன் வீரரான டேனியல் இவான்சை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே பெடரர் சிறப்பாக ஆடினார். அவர் 6-2, 6-2,6-1 என்ற நேர்செட்களில் டேனியல் இவான்சை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி 20 நிமிடங்கள் நடந்தது. இந்த வெற்றியின் மூலம் ரோஜர் பெடரர் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *