அர்ஜுன் ரெட்டிக்காக காத்திருக்கும் ஷாலினி பாண்டே!
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான ஷாலினி பாண்டே, தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 100 சதவீதம் காதல், ஜீவா ஜோடியாக கொரில்லா, விஜய் ஆண்டனியுடன் அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சினிமா பிரவேசம் குறித்து அவர் கூறியதாவது:-
“படிக்கும்போதே சினிமாவில் நடிக்க ஆர்வம் இருந்தது. அப்பாவுக்கு நான் நடிகையாவதில் விருப்பம் இல்லை. ஏதாவது வேலைக்குசெல்லும்படி வற்புறுத்தினார்.
மும்பையில் தங்கி சினிமா வாய்ப்புகள் தேடினேன். அப்போது சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன். சில மாதங்களுக்கு பிறகு அர்ஜுன் ரெட்டி படத்துக்கு தேர்வாகி படப்பிடிப்பில் பங்கேற்றேன்.
இயக்குனரிடம் முத்த காட்சி, நெருக்கமான காட்சிகள் இருக்கக்கூடாது என்று அப்பா கண்டிப்பாக கூறினார். படம் திரைக்கு வந்ததும் பெரிய பாராட்டுகள் குவிந்தன. நிஜ வாழ்க்கையில் அர்ஜுன் ரெட்டி போல் ஒருவர் கிடைத்தால் நிச்சயம் காதலிப்பேன். இந்த படத்துக்கு பிறகு தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வந்துள்ளன.
2 வருட சினிமா பயணத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். சமூக வலைத்தளத்தில் படங்கள் வெளியிடுவதில் விருப்பம் இல்லை. நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு நான் தீவிர ரசிகை. உணவு கட்டுப்பாடு இல்லை. வாரத்தில் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்வேன். புத்தகங்கள் படிப்பேன். எனக்கு தோழிகள் குறைவு.”
இவ்வாறு அவர் கூறினார்.