Tamilசினிமா

ஆன்லைனில் மதுபானம் ஆர்டர் செய்து ரூ.35 ஆயிரத்தை பறிகொடுத்த நடிகை!

தமிழில் விதார்த், ராதிகா ஆப்தே நடித்த சித்திரம் பேசுதடி-2 படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்தவர் பிரியா பானர்ஜி. தெலுங்கில் கிஸ், அசுரா, ஜஸ்பா ஆகிய படங்களிலும், இந்தியில் தேவ் படத்திலும் நடித்து இருக்கிறார். மும்பையில் உள்ள கர் பகுதியில் வசிக்கிறார்.

பிரியா பானர்ஜி ஆன்லைனில் மதுபாட்டில் வாங்க ஆர்டர் கொடுத்தார். அப்போது அவருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர் முதலில் பணம் செலுத்துங்கள் மது பாட்டிலை வீட்டுக்கு கொண்டு தருகிறோம் என்றார். அதோடு வங்கி டெபிட் கார்டு விவரங்களையும் கேட்க, பிரியா பானர்ஜி சொல்லி உள்ளார்.

உடனடியாக அவரது கணக்கில் இருந்து ரூ.23 ஆயிரம் எடுக்கப்பட்டு உள்ளதாக செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. அதிர்ச்சியான பிரியா பானர்ஜி போனில் பேசியவரிடம் தொடர்பு கொண்டு அதிகமான பணம் எடுத்துள்ளீர்களே என்று கேட்டார். உடனே அந்த நபர் மன்னித்து விடுங்கள் மேடம் உங்கள் கூகுள் பே பார்கோடை அனுப்பி அதில் ஸ்கேன் செய்யுங்கள் உங்கள் ரூபாய் திரும்ப வந்துவிடும் என்றார்.

அவர் சொன்னபடி பிரியா செய்ய மேலும் 12 ஆயிரம் பறிபோனது. உடனே அந்த நபருக்கு பிரியா பானர்ஜி போன் செய்ய அவரது செல்பொன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதிர்ச்சியான பிரியா பானர்ஜி போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து செயல்பட்டு மேலும் பணம் வேறு கணக்குக்கு மாறுவதை தடுத்து நிறுத்திய போலீசார் 2 மணிநேரத்தில் பணத்தை மீட்டு கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *