உத்தரபிரதேச பேருந்து விபத்து – 29 பேர் பலி
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து புதுடெல்லி நோக்கி இரண்டடுக்கு கொண்ட அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
இந்த பேருந்து இன்று காலை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஆக்ரா அருகே பாலத்தில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குபேர்பூர் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து உள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உ.பி. சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.