உலகக்கோப்பை கிரிக்கெட் – லண்டன் புறப்பட்ட இந்திய அணி
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில், இந்தியா முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
இதற்கு மே 25-ந்தேதி நியூசிலாந்தையும், மே 28-ந்தேதி வங்காளதேசத்தையும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா எதிர்த்து விளையாடுகிறது.
உலகக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று நள்ளிரவு மும்பை விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டது. வீரர்கள் புறப்படும்போது எடுத்த புகைப்படங்களை பிசிசிஐ இன்று அதிகாலை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படங்களில் வீரர்கள் உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் புறப்படுவது போன்று உள்ளனர். மேலும் ரோகித் ஷர்மா, ஹர்தீப் பாண்டியா, பும்ரா, சாஹல் உள்ளிட்டோரும் புறப்படும் முன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.